செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, தமிழ்நாட்டில் இந்த 6 மாதத்தில் குறைந்தது வடிகால் முறையை சரி செய்திருக்க முடியும். நாங்க ஆட்சிக்கு வந்து 6 மாதம் தான் ஆகிறது என சொல்கிறார். நீங்க 1967இல் வந்து விட்டீர்கள். மாறி மாறி ஆட்சியில் வந்து கொண்டே இருக்கீங்க. ஆனால் இந்த 6 மாதத்தில், தமிழகத்தில் மூன்று வேலை தான் சரியாக நடக்கிறது.
1.) தடுப்பூசி போடுவது. காரணம் என்ன ? 100% இலவசமாக மத்திய அரசு கொடுத்த மானியத்தில் நடக்குது. 2.) ரேஷன் கடைகளில் நாடு முழுவதும் ஒவ்வொரு நபருக்கும்…. 80 கோடி பேருக்கு…. 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு. 3.) விவசாயிகளுக்கு 10-வது முறையாக 2000 ரூபாய் அவர்கள் கணக்கில் போய் சேருகிறது. இதைத் தவிர வேறு என்ன தமிழகத்தில் நடக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.