தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வந்தது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் கொரோனா அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி சென்னை, கோவை, ஈரோடு செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஏழு மாவட்டங்களில் விரைவில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.