Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி”…. தொல்.திருமாவளவன் வைத்த கோரிக்கை…!!!

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழர் இறையாண்மை நாளாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழக அரசு கொண்டாட வேண்டுமென்றும் தமிழகத்திற்கு தனிக் கொடி அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், நவம்பர் 1ம் தேதி மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள். இந்த ஆண்டு முதல் தமிழக அரசு அதனை கொண்டாட முன்வரவேண்டும். தமிழ்நாட்டுக்கு என்று தனிக்கொடி அறிவிக்கவேண்டும். நவம்பர் முதல் நாள் தமிழர் இறையாண்மை நாள் என அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று பேசியுள்ளார்.

Categories

Tech |