நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக அறிவித்து தனிக்கொடியை அறிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட அந்நாளை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மாநிலம் பிறந்தநாள் எனக் கொண்டாடி வருகின்றனர்.தனி மாநில கொடியை கர்நாடகா அறிவித்து நீண்ட காலமாக கொண்டாடி வருகிறது. அதே போன்று தமிழ்நாடு மக்களும் அந்நாளை கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை சிருதைகள் கட்சி முன்வைக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு பிறந்த நாளை தமிழர் இறையாண்மை நாளாக விடுதலைச் சிறுத்தை கட்சி கொண்டாட உள்ளது எனக் கூறிய திருமாவளவன் இந்த நாளை தமிழக அரசு கொண்டாட அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டிற்கு தனிக்கொடியை அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஒரு நாளில் ஜாதி என்று அடையாளங்களைக் கடந்து அனைவரும் தமிழ்நாடு மக்கள் என்ற உணர்வுடன் ஒருங்கிணைவோம்.
இந்த வாய்ப்பை தருகின்றன நாளாக நவம்பர் 1ஆம் நாள் அமையட்டும் என அவர் கூறினார். அதில் அவர், “தமிழக அரசிற்கு மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறோம். நவம்பர் 1 தமிழ்நாடு பிறந்தநாள் அதனை தமிழர் இறையாண்மை நாளாக விடுதலைச் சிறுத்தைகள் இந்த ஆண்டு கொண்டாடுகிறோம் தமிழக அரசு இந்த நாளைக் கொண்டாடுவதற்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை செய்ய வேண்டும் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிக் கொடியை அறிவிக்க வேண்டும் ஒரு நாளில் அந்த குறிப்பிட்ட ஒருநாளில் சாதி மதம் என்கிற அடையாளங்களை எல்லாம் கடந்து நாம் அனைவரும் தமிழ்நாட்டு மக்கள் என்கிற உணர்வோடு ஒருங்கிணைவோம்” என்று கூறினார்.