Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டுக்கு தனி கொடி…. பொது விடுமுறை…. அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கான கொடி ஒன்று அறிவிக்கப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவித்து விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு 2019 அக்டோபர் 25-ஆம் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி 2019 நவம்பர் 1 ஆம் தேதி அன்று அரசு விழா எடுத்து தமிழ்நாடு நாளை கொண்டாடியது. தமிழ்நாட்டில் இந்த பெருவிழாவை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி முதல் ஊராட்சி அலுவலகங்கள் வரை அனைவரும் கொண்டாட வேண்டும் என அரசு அறிவிக்க வேண்டும். மேலும் நவம்பர்  1 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.

இதையடுத்து கர்நாடக அரசு போன்ற பல மாநில அரசுகள் தங்கள் மாநிலத்துக்கு தனி கொடியே அடையாளப்படுத்தி அதனை ஏற்றி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதனை போலவும் தமிழ்நாட்டு மக்கள் கட்சி சார்பில்லாத ஒரு பொதுவான கொடியை  ஏற்றி கொண்டாடுவதற்காக தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியவர்களின் கருத்துகளை கேட்டு அரசே தமிழ்நாடு கொடியை வடிவமைக்க அறிவிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை தமிழ்நாடு நிறைவேற்றினால் சாதி மதம் கடந்து மக்களை ஒருங்கிணைத்த முயற்சிகள் தமிழக அரசுக்கு பெரும் வலுவை தரும் என்று கூறுகின்றனர். இதனால் தான் கர்நாடகத்தில் கன்னட மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழ்நாடு அரசால் தமிழ் நாட்டிற்கான ஒரு கொடியை உருவாக்கப்படும் வரை, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சிவப்பு நிறத்தில் தமிழ்நாடு வரைபடத்தில் உள்ளடக்கிய வெள்ளைக் கொடியை தமிழ்நாட்டில் கொடியாக அறிமுகப்படுத்தி தமிழகமெங்கும் விழா கொண்டாட முடிவு எடுத்துள்ளோம் என்று தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம் என்று அந்த  கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |