தமிழ்நாட்டில் நீட் விவகாரம் பிரச்சனைக்கு திமுக அரசு போராடி நல்ல முடிவை பெற்றுத்தரும் என அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் கூட்டத் தொடரானது இன்று நடைபெற்றுள்ளது. இதில் 2022- 23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். இதை அடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, திமுக அரசானது நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் அரசு அல்ல என்று கூறியுள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு என்பதில் உறுதியாக கடைசி வரை போராடி அதை பெற்றுத் தருவார்.
எனவே நீட் விஷயத்தில் நல்ல முடிவை விரைவில் திமுக அரசு போராடி பெற்று தரும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை மறைக்க எடப்பாடி பழனிச்சாமி, தம் ஆதங்கத்தை எல்லாம் பத்திரிக்கையாளர்களிடம் கொட்டி தீர்த்துள்ளார். மேலும் திமுக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் விரக்தி அடைந்து உள்ளது எனவும் தேர்தல் முறைகேடு பற்றி எல்லாம் அவர்கள் பேசக்கூடாது என்றும் கூறியுள்ளார். அதைப்போல் ஜெயக்குமார் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மனித உரிமை மீறலில் ஈடுபட்டதால் தான் அவர் கைது செய்யப்பட்டார். ஆகவே திமுக அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.