மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “கடந்த 11-ஆம் தேதி பல் ஊடக பத்திரிக்கையாளர்கள் என்ற பதவிக்கான அறிக்கை வெளியானது. அது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணி. மேலும் எட்டு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. கோவை, சென்னை, திருச்சி, நெல்லை, சேலம், மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் வேலை.
ஆனால் இந்த பணிக்கான தகுதியில் இந்தி மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தி அறிவு இருந்தால் கூடுதல் மதிப்பெண் மற்றும் முன்னுரிமை. இது இந்தி தெரியாத விண்ணப்பதாரர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் பணிபுரிய இந்திக்கு ஏன் முன்னுரிமை ? இந்தி எதற்காக உள்ளே நுழைகிறது ? என்பதெல்லாம் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் சசி.எஸ்.வேம்பதி அவர்களுக்கும், மத்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன் “விரும்பப்படும் கூடுதல் தகுதி” பட்டியலில் இருந்து இந்தியை நீக்க வேண்டும்” என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.