Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது…. எடியூரப்பா ஸ்டாலினுக்கு கடிதம்…!!!

மேகதாது அணை கட்டுவது மூலம் தமிழகத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என கர்நாடக முதல்வர், ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும் எனவும், எந்த ஆரம்பகட்ட பணிகளை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எந்த கட்ட நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டை பாதிக்காது என அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காது என அவர் நம்புவதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |