Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டை கலைஞர் நாடாக கூட மாற்றுவார்கள்…..முன்னாள் அமைச்சர் காட்டம்….!!!!!

திமுக அரசை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ளது. இதனையடுத்து மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சுட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. மேலும் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும்.இதே போல், மக்களுக்கு தெரிந்த புகழ்பெற்ற சாலை ஈசிஆர் ஆகும். இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு பெயர் மாற்றப்படுவதை பொதுமக்களை விரும்ப மாட்டார்கள். இதனால் அம்மா உணவகத்தை குறைத்து, கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது எனவும் விரைவில் தமிழ்நாட்டை கலைஞர் நாடு என கூட மாற்றி விடுவார்கள் என திமுக அரசை விமர்சித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், எனக்கு என்ன பணி கொடுத்தாலும் அதை  சிறப்பாக செய்வேன். இந்நிலையில் அதிமுகவில் மட்டுமே கொடி கட்டுபவன் கூட முதல்வராக முடியும் எனவும் திமுகவில் நேரு, பொன்முடி போன்றவர் ஸ்டாலினுக்கு அடுத்து வர முடியுமா? திமுகவில் அது போன்ற நிலைமை இருக்கிறதா? என்ற கேள்வியையும்  எழுப்பியுள்ளார்.

இதையடுத்து திமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் உதயநிதி ஸ்டாலின் முன் நிறுத்தப்படுகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், முதல்வர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான் நிழலாக மற்றும் முதல்வராக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கனிமொழிக்கு எந்த வேலையும் இல்லாத நிலையும்,மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் மகுடத்தை, சூட்ட வேண்டுமென  நினைக்கிறார்.

இந்நிலையில் திமுகவில் வெறும் வாரிசு அரசியல் மட்டுமே நடக்கிறது. மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மரியாதை எதிர்பார்க்க முடியாது. மேலும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து மற்றும் விலைவாசி போன்ற பல்வேறு  பிரச்சனைகளால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதையடுத்து திமுக ஆட்சிக்காலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதியதை யாராலும் மறக்க முடியாது எனவும் இதை தொடர்ந்து தற்போது  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ,மாணவியர் மோதிக் கொள்வது வேதனை அளிக்கிறது.

எனவே  பள்ளிக்கல்வித்துறை விழிப்போடு இருந்தால்,இது போன்ற பிரச்சனைகள் வராது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை மற்றும் அமைச்சர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இது கவலை கொள்ள வேண்டிய விஷயம். இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |