நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டம் சிவகாசியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது, “ஸ்டாலின் தமிழக மக்கள் மத்தியில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்து விட்டார். வெறும் வாய் ஜலத்தின் மூலமாகவே ஆட்சியைப் பிடித்த முதல்வர் சொன்ன எந்த வாக்குறுதியையும் இப்போதுவரை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறினார் ஆனால் செய்யவில்லை. குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என கூறினார் அதையும் செய்யவில்லை. கேஸ் சிலிண்டர் மானிய விலையில் அளிக்கப்படும் என கூறினார் அதையும் செய்யவில்லை. இவ்வாறு வெறும் வாய்ஜாலத்தில் ஏழை மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். கருணாநிதி ஆட்சியில் தொடங்கி தற்போது வரை அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதையே ஒரு தொழிலாக செய்து வருகிறது திமுக. இன்றைய ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதை தங்களின் குறிக்கோளாகக் கொண்டு வருகின்றனர். எந்தெந்த வகைகளில் கொள்ளை எடுக்கலாம் என்பது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இந்த ஆலோசனையை நாட்டின் முன்னேற்றத்தில் செலுத்தினால் இதற்குள் நாடு முன்னேறி இருக்கும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் பொங்கல் பரிசு தொகுப்பு இதைப்பற்றி நாம் கூறவே தேவையில்லை மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரத்தில் திமுக ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆளத் தெரியாத ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். அவர் தினமும் காலையில் 3 இடங்களுக்கு செல்கிறார் நான்கு கடைகளில் டீ குடிக்கிறார் சைக்கிள் ஓட்டுகிறார்கள் இவ்வளவுதான் ஒரு முதல்வரின் வேலை. தமிழக மக்களை பற்றியோ தமிழகத்தின் முன்னேற்றத்தை பற்றியோ சிந்திக்க அவருக்கு நேரம் கிடையாது.
திமுக ஒரு சர்வாதிகார அரசாங்கம் இந்த அரசாங்கத்திடம் இருந்து நியாயத்தை துளி கூட எதிர் பார்க்க முடியாது. ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு உள்ளார்கள் ராஜேந்திர பாலாஜி யாருக்கோ வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தாராம். ராஜேந்திரபாலாஜி இதுபோன்று பொய் வழக்கு போடுவது திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.