தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, “தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பாதுகாப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.