Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை…. ராஜேந்திர பாலாஜி புது சிக்கல்….!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து விட்டு அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதித்தனர்

Categories

Tech |