Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தமிழ்மொழியின் சிறப்புகள்” சிறப்பாக நடைபெற்ற கருத்தரங்கம்…. திரளானோர் பங்களிப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சிமொழி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டது. இந்த கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவர் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். உலகில் தோன்றிய மூத்த குடி பேசிய முதுமொழி தமிழ்மொழி எனக்கூறி அனைவரும் தமிழ் மொழியை முறையாக பின்பற்ற வேண்டும் என கூறினார்.

இந்த கருத்தரங்கில் வருவாய் அதிகாரி முகமது அஸ்லம், வேலூர் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் ராஜேஸ்வரி, வாணியம்பாடி இஸ்லாமிய கலைக் கல்லூரி தமிழ் துறை தலைவர் சிவாஜி, மண்டல வளர்ச்சி துணை இயக்குனர் சுந்தர், தமிழ் வளர்ச்சி உதவி ஆறுமுகம், தமிழ் சங்க கவிஞர் இனியவன், தமிழ்ச்செம்மல் விருதாளர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

Categories

Tech |