தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க வேண்டும் என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கதின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் ..
பிரபல தமிழ் சினிமா சண்டைப் பயிற்சியாளரான ஜாக்குவார் தங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சந்தித்து மனுவாக கொடுத்தனர் .
அதில் தமிழ் மற்றும் அணைத்து மொழிகளிலும் புதிய திரைப்படம் வெளியாகின்றது . இதனை திரைக்கு வந்த அடுத்த நாட்களில் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளம் மூலம் திருட்டுத்தனமாக பதிவுவிட்டு வெளியிடுகின்றனர் .இதனால் தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்கள் மிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் . எனவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்கள் இணைத்தளத்தை முடக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் .
புதிய திரைப்படதிற்கு தியேட்டர் உரிமையாளர்கள் அதிக அளவில் கட்டணத்தை வசூலிக்கப்படுகிறார்கள் .இதனால் பாதிப்புஅடைந்த இளைஞர்கள் தனது ஸ்மார்ட் போன்னில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளதில் பதிவிறக்கம் செய்துகொள்கின்றனர். இப்பொது தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்பட்டுவிடும் என்று இளைஞர்கள் கவலையுடன் இருக்கின்றனர்.