உலகில் பல மொழிகள் தோன்றி அழிந்து விட்டாலும் அறியாமல் இன்னும் இருப்பது நமது தமிழ்மொழி. தமிழ் மொழியில் மட்டும் எவ்வளவு பேசினாலும் எழுதினாலும் நீடித்து நிலைத்து தன்னையும், தன்னை சார்ந்த இடத்தையும் பெருமைப்படுத்தும் குணம் கொண்டது.
நாம் தமிழில் அடிக்கடி ‘சும்மா’ என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். அந்த வார்த்தையின் 15 அர்த்தங்கள் உள்ளதாம். உங்களால் நம்பமுடிகிறதா? இது குறித்து நாம் இதில் பார்ப்போம்.
கொஞ்சம் “சும்மா” இருடா? (அமைதியாக).
கொஞ்ச நேரம் “சும்மா” இருந்து விட்டுப் போகலாமே? (இளைப்பாறி விட்டு).
அவரைப் பற்றி “சும்மா” சொல்லக்கூடாது? (அருமை).
இது என்ன “சும்மா” கிடைக்கும்னு நினச்சியா? (இலவசமாக).
“சும்மா” கதை அளக்காதே? (பொய்).
“சும்மா” தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் – (உபயோகம் இன்றி).
“சும்மா” “சும்மா” கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி).
இவன் இப்படித்தான். *சும்மா* சொல்லிக்கிட்டு இருப்பான். (எப்போதும்).
ஒன்றுமில்லை “சும்மா” சொல்கின்றேன். (தற்செயலாக).
இந்த பெட்டியில் வேறெதுவும் இல்லை “சும்மா” தான் இருக்கின்றது (காலி).
சொன்னதையே “சும்மா”சொல்லாதே (மறுபடியும்).
ஒன்றுமில்லாமல் “சும்மா” போகக் கூடாது (வெறுங்கையோடு).
“சும்மா” தான் இருக்கின்றோம் – (சோம்பேறித்தனமாக).
அவன் “சும்மா” ஏதாவது உளறுவான். (வெட்டித்தனம்).
எல்லாமே “சும்மா” தான் சொன்னேன். (விளையாட்டாக).
நாம் பேசும் வார்த்தையில் சும்மா என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதற்கேற்றபடி அதற்கு அர்த்தமும் உள்ளது.