தமிழ் திரையுலகத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் அவர்களின் பழைய படத்திற்கு பாலிவுட்டில் திடீரென மவுசு கூடியுள்ளது .
தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அஜித் தமிழை தவிர்த்து பிறமொழியில் நடித்திருக்கிறார் என்றால் அது இந்தியில் மட்டுமே . 2001-ம் ஆண்டு வெளியாகியுள்ள அசோகா ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்த அஜித் சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி அவர்களின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவானார்கள்
எனவே அஜிதின் படங்கள் அனைத்தும் தற்போது இந்தியில் டப் செய்து வெளியிட படுகின்றது.
மேலும் அஜித் நடித்த வேதாளம், விவேகம் ஆகிய படங்கள்அனைத்தும் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன . பின்னர் அவருக்கு மிகப் பெரிய வரவேற்புகள் கிடைப்பதால் , அஜித் நடித்த பழைய படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட பாலிவுட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள் . குறிப்பாக அஜித் நடித்த பில்லா, வரலாறு, வீரம், என்னை அறிந்தால் ஆகிய பல படங்கள் இந்தியில் டப் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.