‘தமிழகத்தில் ‘சாதி மதத்தால் பிரிக்க நினைக்கிறார்கள்’ என்று ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருவான்மியூர், ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது “தமிழகத்தில் சாதி மதத்தால் சிலர் பிரிக்க நினைக்கிறார்கள்’. அப்படி செய்தால் தமிழினத்தை அழிக்க முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
நம்மைப் பிளவு படுத்துவது மூலமாக நம் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். அதற்கு தமிழினம் அனுமதிக்கக்கூடாது. இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது என்றும், தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியால் இந்தியாவில் சிறந்த அரசாக முன்னேறிக் கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.