ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று தனி இருக்கை அமைக்க ஒரு வருடமாக தமிழ் அறிஞர்கள் நிதி திரட்டி வருகிறார்கள். அப்படி திரட்டியும் 10 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அறிஞர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று தமிழக அரசு 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது.
இதற்காக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக நிதி ஒதுக்கியுள்ள தமிழக முதல்வர் மற்றும் திரு மாஃபா பாண்டியராஜன் அவர்களுக்கும் தமிழினத்தின் சார்பாக நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.