தேனி மாவட்டத்தில் உள்ள நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் 18 -ஆவது ஆண்டு தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் உறவின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தர்மராஜன், கல்லூரி செயலாளர் குணசேகரன், இணை செயலாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கியுள்ளார். உப தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
இதனையடுத்து தன்னம்பிக்கை பேச்சாளர் விஷ்ணு பிரியா அரிஸ்டோ, கல்லூரியின் முன்னாள் மாணவியும், சின்னமனூர் கிரசண்ட் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி முதல் வருமான அனுரூபா என்ற ஆசிபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசியுள்ளனர். இந்நிலையில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்தியாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர் ஜெய் ஜஸ்வந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 3 தங்க பதக்கம், 2 வெள்ளி பதக்கம் மற்றும் தனிநபர் சாம்பியன் கோப்பை பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு உறவின் முனை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.