தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வானது அதிமுகவில் இருந்து விலகி தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இணையவழி மூலமாக பாடாண்தினைக் கவியரங்கம் தமிழ்ப் படைப்பாளிகள் பேரிக்கம் சார்பில் நடைபெற்றது. அதில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டு பேசியதாவது, “தேர்தலில் 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை வாங்கினோம்.
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் நம் மிரட்டலுக்கு பயந்து இடஒதுக்கீட்டை கொடுத்தனர். இந்த இடஒதுக்கீட்டை தராமல் இருந்திருந்தால் கூட்டணி வேண்டாம் என்றிருப்போம். மேலும் 10.5 சதவீதம் என்பது நமக்கு போதியதாக இல்லை. அதை 15 சதவீதமாக உயர்த்துவதே நமது நோக்கமாக இருந்து வந்தது.
தமிழ் இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் இருந்து வருகிறது, மேலும் ரூ.1 இலட்சம் தமிழகத்தில் தமிழ் இருப்பதை நிரூபிப்பவருக்கு கொடுக்கப்படும். தமிழ் வளர்ச்சிக்காகவும், மது விலக்கை தமிழகத்தில் கொண்டு வரவும் நாம் ஆட்சியை கைப்பற்றியது அவசியமாகும். அதற்கான வேலைகளை கட்சி நிர்வாகம் தீவிரமாக செயலாற்றி வருகிறது” என்று கூறினார்