பொறியியல் கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பாடங்களை தொடங்குவதற்கு 14 கல்லூரிகளுக்கு இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அனுமதி அளித்துள்ளது.
இன்றளவில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஆங்கிலத்தில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்ட மறுக்கின்றனர் .
இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, மராத்தி கன்னடம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் பயிலலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. கணினி அறிவியல், எலக்ட்ரானிக், சிவல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஐடி ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியியல் படிப்புகளில் பிராந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்பட உள்ளன.