Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழ் கலாச்சாரப்படி டும் டும் டும்…. மலேசிய பெண்ணை கரம் பிடித்த வாலிபர்….!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசிய நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் ஒன்றியம் சாத்தகோன் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளை மடம் என்னும் கிராமத்தில் முருகேசன் – தில்லைவனம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் அருண் செல்வம் மாலத்தீவில் உள்ள ஒரு உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மலேசிய நாட்டைச் சேர்ந்த மீ சிவன்-லியாங் ச்விச்யி தம்பதியினினரின் மகள் யீ ஷ்யான் என்பவரும் அதே உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தநிலையில் மலேசிய பெண்ணுக்கு தமிழ் கலாச்சாரம் பிடித்து போன காரணத்தினால் தன்னுடைய திருமணம் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இருவீட்டாரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம்  மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து  தமிழ் கலாச்சாரப்படி மணமகன் அருள் செல்வம் வேஷ்டி சட்டையுடனும், மணமகளான யீ ஷ்யான் சேலை அணிந்தும் மணமேடையில் வந்து அமர்ந்துள்ளனர். இதனையடுத்து ஓதுவார் தமிழ் கலாச்சாரப்படி யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி தாலி சரடு பொருத்தியிருந்த மஞ்சள் கயிறு மணமகன் செல்வத்திடம் எடுத்துக் கொடுக்க அவர் தன்னுடைய காதலி கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இது பற்றி மணமகன் பேசும்போது, கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் காதலித்து வந்தோம். என்னுடைய மனைவிக்கு தமிழ் கலாச்சாரம் பிடித்துப் போனதனால் அவர் விருப்பப்படி தற்போது எங்களது திருமணம் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |