தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக திகழும் கார்த்தி- ரஞ்சினி தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது.
பருத்திவீரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிகர் கார்த்தி அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே வெற்றி கண்ட அவர், அதன்பிறகு பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி மற்றும் மெட்ராஸ் என பல்வேறு பலன்களை தொடர்ந்து நடித்துள்ளார். அவரின் அனைத்து படங்களும் பெரிய ஹிட்டாகியுள்ளன. அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
அந்த தம்பதிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதன் பிறகு ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கார்த்தி மற்றும் ரஞ்சனி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நற்செய்தியை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.