Categories
சினிமா

தமிழ் சினிமாவில் அருள்நிதி செய்த புதிய சாதனை…. குவியும் பாராட்டு….!!!!

வித்தியாசமான கதைகளை தேடி தேடி நடித்து வருகிறார் நடிகர் அருள்நிதி. அதன்படி அருள்நிதி நடிப்பில் உருவாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள திரைப்படம் டைரி. திரில்லர் கதைகளத்தை கொண்டு உருவாக்கி உள்ள இந்த படத்தை அஜய் ஞானமுத்துவுடன் இணை இயக்குனராக இருந்த இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை பவித்ரா நடித்துள்ளார். மேலும் வி.ஜெ.சாரா, ஜெயபிரகாஷ், ஆடுகளம் கிஷோர், சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல மர்மங்கள் நிறைந்த புலனாய்வு திரில்லர் படமாக உருவாகி வெற்றி பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து ரோன் எதன் யோஹான் மிரட்டலான பின்னணி இசையை கொடுத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி டைரி படம் திரையரங்கில் வெளியானது. இதனையடுத்து செப்டம்பர் 23ஆம் தேதி ஆஹா ஓடிவிடு தளத்தில் இப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படம் ஓடிடியில் 15 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் அருள்நிதி தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

Categories

Tech |