தமிழ் சினிமா உலகில் காதல் திரைப்படங்கள் வெளியானளே பெரும்பாலும் வெற்றியை பெற்றுத்தரும். இந்த வகையில் இளைஞர்கள் மனதை கவர்ந்த எட்டு காதல் திரைப்படங்கள் பற்றி நாம் பார்க்கலாம்.
ஆட்டோகிராப்: இத்திரைப்படத்தில் சேரன், சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தை சேரனே இயக்கியிருந்தார். பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் ஏற்பட்ட காதல் மற்றும் அதன் வலிகளை உணர்ச்சிபூர்வமாக இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்கள்.
காதல் கோட்டை: அகத்தியன் இயக்கியுள்ள இப்படம் அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் கதாநாயகியாக தேவயாணி நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் பார்க்காமலேயே காதல் என்ற கருத்தை கொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
குஷி: எஸ்.ஜே.சூர்யா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய், ஜோதிகா,விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் கல்லூரியில் ஏற்படும் காதல் ஈகோ காரணமாக இருவரும் சொல்லாமல் இருந்து இறுதியில் எப்படி சேர்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டிருந்தது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சில்லுனு ஒரு காதல்: இத்திரைப்படத்தில் சூரியா,ஜோதிகா, பூமிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதியினர் தன் கணவரின் கடந்தகால காதலை பற்றி தெரிந்த மனைவி அதை எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்பதை மையமாகக் கொண்டிருந்தது. இப்படம் ரசிகர்களிடையே அமோக வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “முன்பே வா என் அன்பே வா” பாடல் இப்போதும் பெரும்பாலோரின் மனதில் இடம் பெற்றுள்ளது.
மதராசப்பட்டினம்: இத்திரைப்படத்தில் ஆர்யா,எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது ஏற்பட்ட காதல் கதையை மையமாகக் கொண்டுள்ளது. இதில் 60 ஆண்டுகளுக்கு பிறகு தன் காதலனைத் தேடி இந்தியா வருகிறார். கதாநாயகி.
ராஜா ராணி: இத்திரைப்படத்தில் ஆர்யா,நயன்தாரா,ஜெய்,நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இரு காதல் ஜோடிகள் காதலித்து சேர முடியாமல் பிரிகிறார்கள். காதல் தோல்வியடைந்தாலும் பிறகும் காதல் மற்றும் வாழ்க்கை இருக்கின்றது என்ற கருத்தை உணர்த்தியது.
ஓ காதல் கண்மணி: இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். இதில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வதை படமாக்கப்பட்டது.
96: இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை பிரேம்குமார் இயக்கியிருந்தார். இதில் பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல், சில பிரச்சினையால் இருவரும் பிரிந்தனர். பிறகு 22 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே இருக்கும் காதல் பற்றி தெரிவிக்கும் படமாக இருந்தது.