Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தமிழ் சினிமாவை அவ்வளவு மிஸ் பண்ணுறேன்”…. நேர்காணலில் நஸ்ரியா ஓபன் டாக்….!!!!!

நடிகை நஸ்ரியா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் நஸ்ரியா. இவர் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர் தனது கியூட் ரியாக்ஷன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பொழுதே தனது காதலரான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்த நஸ்ரியா அவ்வப்போது மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அடடே சுந்தரா என்ற திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நஸ்ரியா தமிழில் எப்ப நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது நஸ்ரியா, தமிழ் சினிமாவை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறியுள்ளார். மேலும் தமிழ் ரசிகர்களை அவ்வளவு பிடிக்கும் எனக் கூறி இருக்கின்றார். ஆகையால் நஸ்ரியா மீண்டும் தமிழ் திரைப் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Categories

Tech |