தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான அட்டவணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.இதனை அடுத்து ஜூன் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.ஊரடங்கு தளர்த்தப்பட்டதனையடுத்து தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
அதன்படி அக்டோபர்-15-ம் தேதி முதல் வேட்பு மனு விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.அக்டோபர் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாக அக்டோபர் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 29-ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.