Categories
தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான விசு உடல்நலக்குறைவால் காலமானார்!

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான விசு உடல்நலக்குறைவால் காலமானார். 1945ம் ஆண்டு பிறந்த விசுவுக்கு 74வயதாகிறது . இயக்குனர், கதாசிரியர், நடிகர், வசனகர்த்தா என பல பரிமாணங்களை கொண்டவர். திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.

குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். சமீப காலமாக வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

Categories

Tech |