Categories
சினிமா

தமிழ் திரையுலகின் போக்கை கடுமையாக கண்டிக்கிறேன்…. நடிகர் அருண்பாண்டியன் ஆவேசம்…..!!!!!

அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி உள்ள புதிய திரைப்படம் “ஆதார்” ஆகும். இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், “காலா” புகழ் திலீபன், ‘”பாகுபலி” புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் இசைவெளீயிட்டு விழாவானது சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவா, பூச்சி முருகன், அமீர், இரா.சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகர் அருண்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்று  பேசினார்கள். அப்போது நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் பேசியதாவது, ’18 ஆண்டுகளுக்கு பிறகுதான் “அன்பிற்கினியாள்” எனும் படத்தில் நான் மீண்டுமாக நடிக்கத் தொடங்கினேன். அதன்பின் என்னைத் தேடி எட்டு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்த நிலையில், அதில் எனக்கு இரண்டே இரண்டு படத்தின் கதைதான் பிடித்தது.
அவற்றில் ஒன்று ஆதார் ஆகும். பின் இயக்குனரிடம் இப்படத்தில் வேறு யார் நடிக்கிறார்கள்..? என கேட்டேன் கருணாஸ் என்றார். உடனே கருணாசுக்கு போன்செய்து ராம்நாத் கதையை கூறினார். அவர் கூறியதை கூறியவிதத்தில் எடுத்து விடுவாரா..? என கேட்டேன். அவர் தான் முழு நம்பிக்கையுடன் எடுத்து விடுவார் என்று கூறினார். கதையைச் கூறியது போல் எடுத்துவிட்டால், நான் எனது சம்பளத்திலிருந்து 50 % சலுகையாக தருகிறேன் என்று கூறினேன். இதற்கிடையில் படம் மிக நேர்த்தியாக உருவாகி இருக்கிறது.‌ இங்குமேடையில் இயக்குனர் சரவணன் பேசியதாவது, தமிழ் சினிமாவின் பொற்காலம் இது என தவறான தகவலை கூறி இருக்கிறார். தமிழ் திரையுலகின் பொற்காலம் என்பது இயக்குனர் பாரதிராஜா படம் இயக்கியகாலம், நாங்கள் நடித்த காலம் என அதனைத்தான் குறிப்பிட வேண்டும். இப்போது எல்லாமே மாறிவிட்டது. தமிழ் திரைப்படம் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருக்கிறது என்று குறிப்பிட வேண்டுமெனில் இன்று தமிழகத்தில் வேற்று மொழிபடங்கள் தான் அதிக வசூலை குவிக்கிறது.
அண்மையில் வெளியான அஜித் படம் மற்றும் விஜய் படம் ஆகிய இரண்டும் படத்திற்காக செலவு செய்யவில்லை, தங்களுக்காக செலவழித்து கொண்டனர். இதனிடையில் தயாரிப்பு செலவின் 90 சதவீதத்தை ஊதியமாக கேட்டால் எப்படி..? படத்தை உருவாக்க முடியும். இதனால் இந்த மேடையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இப்போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கும்போது 10 சதவீதம் தான் சம்பளம், மீதி 90% படத்தயாரிப்பிற்காக இருக்கும். அப்போதைய காலகட்டத்தில் தமிழ் திரைப்பட கதைகள் பட உருவாக்கத்தால் வென்றது. “ஆதார்” படத்தில் கருணாஸ் சம்பளம் வாங்கவும் இல்லை, படத்தின் தயாரிப்பாளரை நாங்கள் யாரும் சந்திக்கவும் இல்லை. இங்கு தான் சந்திக்கிறோம். சினிமா ஒருமோசமான திரையுலகம். எனினும் இந்த சினிமா மீது நம்பிக்கை வைத்து புதிய தயாரிப்பாளர் ஒருவர் வந்திருக்கிறார் எனில் அவரை மனதார பாராட்டுகிறேன். இப்படத்திற்காக நாங்கள் உண்மையாக உழைத்து இருக்கிறோம். அதனால் இப்படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று கூறினார்.

Categories

Tech |