Categories
சினிமா

தமிழ் திரையுலகில் அசத்திய 5 பாட்டிகள்…. யாரெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் ஒருசில கதாபாத்திரங்கள் நமது வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும். அதன்படி பல்வேறு படங்களில் பாட்டி கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். இவர்கள் ஒருசில காட்சிகளில் மட்டுமே நடித்து இருந்தாலும் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து உள்ளனர். அந்த வகையில்

எஸ் என் லட்சுமி

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களில் எஸ் என் லட்சுமி நடித்தார். இவர் தன் இறுதி காலங்களிலும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். இவர் கமலஹாசனின் மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, விருமாண்டி ஆகிய பால்வெட்டு படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

தேனி குஞ்சரம்மாள்

இவர் பல படங்களில் ஏ.ஆர் ரகுமான் இசையில் பின்னணி பாடகியாக பணியாற்றியவர் ஆவார். மேலும் குஷி, காதல் சடுகுடு, விசில், திருப்பாச்சி, சிவகாசி, தமிழ்படம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் இவருடைய பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ரங்கம்மாள்

தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் கே ஆர்.ரங்கம்மாள் ஆவார். இவர் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் வடிவேலுடன் இவர் இணைந்த காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

பரவை முனியம்மா

பல பேராலும் நன்கு அறியப்படுபவர் தான் பரவை முனியம்மா. குறிப்பாக தூள் படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. பின் இவர் கோவில், தேவதையை கண்டேன், சண்டை, தமிழ்படம், பலே பாண்டியா, வீரம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத் திரையில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

குலப்புள்ளி லீலா

மலையாள சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் குலப்புள்ளி லீலா. இவர் ரஜினியின் முத்து படத்தில் நடித்து இருந்தார். அதன்பின் பல்வேறு படங்களில் நடித்தாலும் விஷாலின் மருது படத்தில் அவருடைய அப்பத்தாவாக தனது கம்பீரமான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தார்.

Categories

Tech |