Categories
மாநில செய்திகள்

தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு… இயக்குனர் பாக்கியராஜ் வேதனை…!!!!

தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தென்னிந்திய திரைப்படம் எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரும் திரைப்பட இயக்குனருமான கே பாக்கியராஜ் வேதனை தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே பாக்யராஜ் கூறிய போது, தமிழ் திரையைப் பொறுத்தவரையில் அனைவருக்கும் உச்சரிக்கும் பெயர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். அவருடன் நல்ல நட்பை கொண்டிருந்தேன் எனது எழுத்துக்களை அவர் மிகவும் விரும்பினார்.

இந்த நிலையில் சமீப காலமாக தமிழ் திரை இலையில் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்து இருக்கிறது. கதை இலாகா என்பதை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் பிற மொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குனர்கள் படம் எடுக்கின்றார்கள் வெற்றிமாறன் போன்ற நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரை உலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என கூறியுள்ளார். மேலும் முதல்வருடன் சந்திப்பின்போது சங்கத்தின் செயலாளர் லியாகத் அலிகான் பொருளாளர் பலசேகரன் போன்றோர் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |