தமிழ் ,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியவர் நடிகர் பரத் கல்யாண். இவரின் தந்தை மறைந்த பழம்பெரும் நடிகர் கல்யாண் குமார் ஆவார். பரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டு கொண்ட நிலையில் தொடர்ந்து சின்ன திரையில் நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமின்றி யாக்கா, சிருங்காரம், பாட்டாளி, பார்த்த ஞாபகம், சுள்ளான் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
மேலும், பாரதி கண்ணம்மா, கனா காணும் காலங்கள்-2 உள்ளிட்ட சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி (43) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரத் கல்யாண் – பிரியா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.