‘வாய்தா’ பட நாயகி பவுலின் ஜெசிகா, “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து இவருடைய தற்கொலை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது காதலன் சிராஜூதீனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிராஜூதினை விசாரணைக்கு ஆஜராக பலமுறை அழைத்தும், பல்வேறு காரணங்களால் அவர் தட்டிக் கழித்துவந்த நிலையில், இன்று கோயம்பேடு காவல்நிலையத்தில் ஆஜராகி அவர் வாக்குமூலம் அளித்தார். அதில் தான் திருமணம் ஆனவர் என்றும், ஜெசிகா தன்னை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை தொடரும்.