ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் வாரிசு நடிகர் அபிஷேக் பச்சன் ஆவார். தமிழில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டும் நடித்திருந்த திரைப்படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”. தற்போது இதனுடைய ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்கப்போகிறார்.
தமிழில் 2019 ஆம் வருடம் மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் வெளியாகிய படம் கே டி என்ற கருப்புதுரை. இது 71 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவான படம் ஆகும். இத்திரைப்படத்தில் 71 வயது முதியவராக மு.ராமசாமி என்பவரும், 8 வயது சிறுவனாக நாகா விஷாலும் நடித்து இருந்தனர்.
இந்த படத்தில் நடித்த சிறுவன் நாகா விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து மதுமிதா ரீமேக் செய்யப்போகிறாராம். தமிழ் படத்தில் மு.ராமசாமி நடித்த 71 வயது முதியவர் கதாபாத்திரத்தில் அபிஷேக் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.