Categories
மாநில செய்திகள்

“தமிழ் பாடங்களை நடத்த யாரை வேணாலும் அனுமதிக்கலாமா?”…. ராமதாஸ் சரமாரி கேள்வி….!!!!

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் தான் தமிழ் பாடங்களை நடத்த முடியும். எந்த ஆசிரியரும் தமிழ் பாடங்களை நடத்த அனுமதிக்கலாமா என அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு செய்வதைவிட தமிழ் மொழியை அவமதிக்க முடியாது; தமிழை கட்டாயப்பாடமாக்கியதன் நோக்கத்தை இது சிதைத்து விடும்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை நடத்துபவர்கள் தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பொறியியல் படிப்புகளுக்கு 51 பாட வேலைகள் மட்டும் தமிழ் கற்றுத் தரப்படுவது போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு பருவத்திலும் தமிழுக்கு 45 பாட வேலைகள் ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |