தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் வழக்கம். அதன்படி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் (06005) ஏப்ரல் 13-ஆம் தேதி(இன்று) இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் (06006) மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை விருதுநகர் மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Categories