குதிரை பந்தயம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம் ஒரு வருடமாக கொரோனா பாதிப்பு காரணமாக நடைபெறவில்லை. கடந்த வருடம் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி குதிரை பந்தயம் நடைபெற்றது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பந்தயம் நடைபெறுகிறது.
இந்த பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குதிரைகள் வந்துள்ளது. இந்த குதிரைகளுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பந்தயம் குறித்து மெட்ராஸ் ரேஸ் கிளப் செயலாளர் நிர்மல் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் ஆண்டுதோறும் குதிரைப் பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தில் குதிரை பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்தப் பந்தயத்தில் 700 குதிரைகள் பங்கேற்க உள்ளது. இந்த போட்டி மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் என கூறினார்.