Categories
தேசிய செய்திகள்

தமிழ் புத்தாண்டு பரிசு… ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!!

திருப்பதி செல்லும் பயணிகளுக்கு ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் பயண கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வெளியானதை  தொடர்ந்து எரிபொருட்களின் விலை தினந்தோறும் ஏற்றப்பட்டு வருகிறது. ஒரு மாதமாக ஏறிக்கொண்டிருக்கும் எரிபொருட்களின் விலை உயர்வின் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 101 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்ற நிலையில் பெட்ரோல், டீசல் அதிகரிப்பால் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.

மேலும் இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்ய பயண கட்டணத்தை உயர்த்த ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் அதிரடியாக முடிவு எடுத்திருக்கிறது. இதன்படி கிராமப்புறங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோன்று டீலக்ஸ் பஸ்ஸில் 5 ரூபாய்,சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் போன்ற பஸ்களின் வழக்கமான கட்டணத்தை விட பத்து ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆந்திராவில் 60 ரூபாயாக இருந்த டீசல் விலை தற்போது 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.

இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை வேலூரில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ஆந்திர மாநில அரசு பேருந்துகளிலும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பஸ்களும் பயண கட்டணம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஆந்திர மாநில அரசு தொடர்ந்து கேரளா செல்லும் பஸ், டாக்சி போன்ற பயண கட்டணத்தை உயர்த்த அந்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அரசு பேருந்துகளில் மே 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக அந்த மாநில அரசு போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது. பஸ் கட்டண உயர்வு , ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |