தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு திமுக அரசு மாற்ற திட்டமிட்டு இருந்தால் அதனை உடனே கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ் புத்தாண்டு என்பதை சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு திமுக அரசு மாற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து அரசு உரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும். அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் அதை கைவிட வேண்டும். கருணாநிதி செய்த தவறினை அம்மா அவர்கள் திருத்தி மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ் புத்தாண்டாக மாற்றினார்.
நீட்தேர்வு, 7 தமிழர் விடுதலை, இஸ்லாமிய சிறை கைதிகள், விடுதலை, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்த திமுக அரசு தனது தோல்வியை மறைப்பதற்காக இதுபோன்ற வேலைகளை செய்து வருகின்றது. உண்மையாகவே தமிழை வளர்ப்பதற்கு செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவு இருக்கும் நேரத்தில், அதையெல்லாம் விட்டுவிட்டு எப்போதும் விளம்பரத்திற்காகவே செயல்பட்டு வருகின்றது. தமிழக மக்களை ஏமாற்ற நினைப்பதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.