திமுக எம் பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் புதியதாக வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் இந்தி திணிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழி டுவிட்டர் பக்கத்தில் “புதிய ஆதார் அட்டையில் ‘எனது ஆதார், எனது அடையாளம்’ என்ற வாசகம் தமிழில் இருந்து இந்தியில் மாற்றப்பட்டு இருக்கிறது. மாநில மொழியில் அங்கீகரிக்கப்பட்ட மொழி எதுவாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதிமொழியோடு தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இன்று மாநில மொழிகள் ஆதார் அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.