தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் செவிலியருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன்னிலையில் நின்று போராடியதற்காக தமிழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் நர்ஸ் ஒருவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. 59 வயதான கலா நாராயணசாமி தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளை பயன்படுத்தியுள்ளதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கலா நாராயணசாமியும் சேர்ந்து மொத்தம் ஐந்து நர்சுகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அந்த நாட்டினுடைய ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் கையெழுத்துள்ள சான்றிதழ் மற்றும் பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர்கள் சன்மானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூபாய் 5 லட்சத்து 39 ஆயிரம் ஆகும்.