கர்நாடக மாநிலத்தில் தமிழ் பெயரை தார்பூசி அழித்த வாட்டாள் நாகராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோலார் தங்க வயல் பகுதியில் வசிப்பவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமிழர்கள் என்பதால் அங்குள்ள பேருந்து நிலையத்தின் பெயர் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராபர்ட்சன் பேட்டை பேருந்து நிலையத்தில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்கள் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தார்பூசி அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பு நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜை கைது செய்தனர்.