அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின்பு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம்…! நான் 2017 டிசம்பர் 31 அரசியலுக்கு வருவேன் என்று சொல்லியிருந்தேன்.அப்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருந்தது. அந்த நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்போது… சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் கட்சியை ஆரம்பித்து…. நான் 234 தொகுதியில் போட்டியிடுவேன் என்று சொல்லி இருந்தேன்.
அதற்க்கு பிறகு மார்ச் மாதம் நான் நிர்வாகிகளை சந்திக்கும்போது சொல்லியிருந்தேன்… மக்கள் மத்தியில் எழுச்சி வரணும், அந்த எழுச்சி உண்டாகிய பிறகு…. நான் வந்து கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருந்தேன். ஆனால் இந்த காலகட்டத்தில் என்னால செய்ய முடியல. என்னுடைய உடல்நிலையை கரணம் காட்டி மருத்துவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள்.
நீங்க ஜனங்க மத்தியில போயி…. பிரச்சாரம் செய்து அவர்களை சந்திக்கிறது ஆபத்து அப்படின்னு சொன்னாங்க. இதனால் என்னால் பிரசாரம் செய்ய முடியல. நான் சிங்கப்பூர்ல மருத்துவ சிகிச்சைல இருக்கும் போது தமிழ் மக்கள் செய்த பிரார்த்தனை, வேண்டுதல் தான் என்னை உயிர் பிழைக்க வைத்தது. அவங்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. கொடுத்த வாக்கில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன். ஒரு அரசியல் மாற்றம் கட்டாயம் வேண்டும். அது ரொம்ப கட்டாயம், காலத்தின் தேவை… ரொம்ப முக்கியம்… ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு நடந்தே ஆகணும்…. இப்போ இல்லன்னா வேற எதுவுமே கிடையாது, மாத்தணும்… எல்லாத்தையும் மாத்தணும் என ரஜினி பேசினார்.