Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்….. படுக மொழி அகராதி வெளியீடு…. சிறப்பாக நடைபெற்ற விழா…!!!

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முன்மொழி அகராதி நெலிகொலு அறக்கட்டளை சார்பில் படுக மொழி சொற்களின் அர்த்தங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகராதி தயாரித்தனர். நேற்று ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைத்து அகராதி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு நெலிகொலு அறக்கட்டளை தலைவர் ஆர்.தர்மன் தலைமை வகித்துள்ளார்.

இதனை அடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் அகராதியை அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அகராதியை வெளியிட்டு பேசியுள்ளார். இதில் மாநில தலைமை கணக்காளர் ஆர்.அம்பலவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |