Categories
மாநில செய்திகள்

“தமிழ் மொழியின் சிறப்பு”….. வழக்கறிஞயர்களின் நலனுக்காக பாடுபடும் முதல்வர்….. புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி….!!!!

தமிழ் மொழியின் சிறப்பு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புகழ்ந்து பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நிர்வாக பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இங்கு நாமக்கல், விழுப்புரம், சங்கராபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற வளாகத்தின் திறப்பு விழா மற்றும் சென்னை எழும்பூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்ட வணிக நீதிமன்றத்தின் திறப்பு விழா போன்றவைகளும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 7 லட்சம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட சென்னை உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா பேசினார். இவர் தமிழ்மொழியை போன்று சிறந்த மொழி வேறு எதுவும் கிடையாது. தமிழர்கள் என்ற அடையாளம் தமிழ் மொழியில் இருக்கிறது.

சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறைகாக தங்களுடைய சிறப்பான பணியை செய்து வருகின்றனர். அதன்பிறகு வழக்கறிஞர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். நீதித்துறை மக்களின் நம்பிக்கையை கட்டாயமாகப் பூர்த்தி செய்யும். அதன் பிறகு நீதிமன்றத்தில் இருக்கும் 200 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் வழக்காடும்போது மாநில மொழிகளை பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது. மாநில மொழிகளை பயன்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்றுவது என்பது மிகவும் கடினமான பணிதான். இருப்பினும் எங்களுடைய பணிகளை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம் என்றார்.

Categories

Tech |