ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். இந்நிலையில் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர்கள்.
அவர்கள் நீண்டகாலம் கடுமையாக உழைத்து உள்ளனர். அவர்கள் தங்களுக்காக மட்டும் விளையாட செல்லவில்லை, நாட்டுக்காக செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகிலேயே பழமையான மொழியான தமிழ் கலாச்சாரத்தின் மிகப்பெரிய அபிமானி நான் என்று தெரிவித்துள்ளார்.