Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி கற்க…. ரூ.1 கோடி ஒதுக்கீடு…. தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் முடிவடைந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இன்று தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது.

இதில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமது தமிழ்மொழியை கற்பதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அயல்நாட்டு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பித்த ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |