திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பஞ்சாங்கமும் கோவில் மண்டபத்தில் வாசிக்கப்பட்டது.
அனைத்து வகையான பழங்களையும் கொண்டு விசுக்கனி அலங்காரமும் நடைபெற்றது. பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. தமிழ் வருடப் பிறப்பான நேற்று சாமியை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.