தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,
இளங்கோவடிகள் விருது- நெல்லை கண்ணன்
பாரதிதாசன் விருது- புலவர் செந்தலை கவுதமன்
பேரறிஞர் அண்ணா விருது- நாஞ்சில் சம்பத்
மகாகவி பாரதியார் விருது- கிருஷ்ணகுமார்
சொல்லின் செல்வர் விருது- சூர்யா சேவியர்
தேவநேயப்பாவாணர் விருது- கு.அரசேந்திரன்
உமறுப்புலவர் விருது- நா. மம்மது
கம்பர் விருது-பாரதி பாஸ்கர் மற்றும்
சிங்காரவேலர் விருது- மதுக்கூர் ராமலிங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு விருது பெற்றவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.