கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ், ஜெயராம் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா ரஞ்சித், பார்த்திபன் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் போன்றோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன். இதற்கும் அரசியலுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.
தாய்மொழியை விட்டுடாதீங்க இந்தி ஒழிக என சொல்வது என் வேலை இல்லை. ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத் தன்மைதான். மேலும் நான்கு ஆண்டுகளுக்குப் பின் என் படத்தின் விழா, அதற்கு நான் காரணம் அல்ல நீங்கள் தான். யாருமே இங்கு முழு நேர அரசியல் வாதிகள் இல்லை. முதன் முதலில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற பொழுது டி.ஆர். என்னை தேடி வந்து கதறி கதறி அழுதார், நீங்கள் எப்படி இப்படி பண்ணலாம் கேட்டு அழுது என் சட்டை நனைந்து போனது என் முடிவிற்கு நான் உட்பட பலரும் வருத்தம் தெரிவித்தனர்.
அரசியல் களத்தில் புதிய நாகரீகத்தை வளர்க்க அரசியல் வந்திருக்கின்றேன். இப்ப வரவில்லை என்றால் எப்போது? என் தமிழ் உச்சரிப்புக்கு காரணம் மூவர் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன். தாத்தாவுடன் தொடங்கிய பயணம் தற்போது பேரன் உதயநிதி வரை தொடர்ந்து வருகிறது. மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறார்களா என்று கேட்டனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர். ஆனால் அது எப்படி என்று கேட்கலாம். ரஜினிகாந்தும் நானும் பேட்டியாக இருந்துகொண்டு நண்பர்களாக இல்லையா அது போல தான் என அவர் தெரிவித்துள்ளார்.